ஒரு மரம் நட்டால் ஒரு லட்சம் பேருக்கு அன்னதானம் செய்ததற்கு சமம்…!

மற்றவை

“மருந்தாகித் தப்பா மரத்தாற்றல் செல்வம் பெருந்தகை யான்கண் படின்” என்கிறது குறள். பெருந்தன்மை உள்ளவனிடத்தில் உள்ள செல்வம், தன் அனைத்து பாகங்களையும் மருந்தாய் தரும் மரத்திற்கு ஒப்பானதாகும்” என்று கூறுகிறார் திருவள்ளுவர்.

‘மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்’, ‘விண்ணின் மழைத்துளி மன்ணின் உயிர்த்துளி’, ‘இயற்கையைக் காப்போம்’ போன்ற விழிப்புணர்வு வாசகங்கள் சில ஆண்டுகளாகவே ஓங்கி ஒலித்துக் கொண்டு வருகிறது. புவி வெப்பமடைந்து மனிதன் அழிவை நோக்கி செல்லும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுவிட்டான் என்பதே இதற்கு காரணம். இதைத் தவிர்க்கத்தான் மரங்களை வளர்க்க வேண்டுமென்பது கட்டாய கடமையாகியுள்ளது.

“வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம்” என்ற நிலை மாறி “ஆளுக்கொரு மரம் வளர்ப்போம்” என்று சொல்லும் நிலைக்கு வந்துவிட்டோம். இயற்கையை பாதுகாக்கும் முதல் காரணியான மரங்களை இல்லாமல், இன்றிருக்கும் நிலையே தொடர்ந்து நீடித்தால் ‘இன்னும் பத்து ஆண்டுகளில் தமிழகம் பாலைவனமாகும்’ என்ற ஆய்வின் கூற்று நம்மை எச்சரிக்கை செய்கிறது.