எப்போதும் மகிழ்ச்சியாக வாழ_வேண்டுமா…???

சுய பிரகடனம்

நீங்கள் எப்போதும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் எனில் நீங்கள் முதலில் தெரிந்து கொள்ளவேண்டியது உங்கள் மகிழ்ச்சியை எது கெடுக்கிறது என்பதைத் தான். உங்கள் மகிழ்ச்சிக்கு தடையாக உள்ளது எது தெரியுமா?
நீங்கள் அனைத்தின் மீதும் கொண்டுள்ள #பற்று தான்.

பற்று என்பது என்ன?
நாம் ஒன்றை இது என்னுடையது என சொந்தம் கொண்டாடுவது தான் பற்று. நாம் எதையெல்லாம் சொந்தம் கொண்டாடுகிறோம் என்று பட்டியலிட்டுப் பாருங்கள் நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளையும் சொந்தம் கொண்டாடுகிறோம் அந்தப் பொருள்கள் அனைத்தும் நமக்கு மட்டுமே சொந்தம் என்பது போலவும் வாழ்நாள் முழுக்க நம்முடன் வரப் போவது போலவும் நினைத்து சொந்தம் கொண்டாடுகிறோம் ஆனால் எதுவும் நிலை இல்லை என்பதும் தெரியும்.

பின்னர் அதற்கு ஒருபடி மேலே சென்று மனிதர்களையும் சொந்தம் கொண்டாடுகிறோம் அப்போதுதான் இன்னும் அதிகமான துன்பங்களை சந்திக்க நேரிடுகிறது ஏனென்றால் சில சமயம் நாம் பற்று வைத்துள்ளது வெறும் உடல் அல்ல நம்மைப் போலவே உணர்வுகளை கொண்டுள்ள ஒரு உயிர் என்பதை மறந்துவிடுகிறோம்.

அவர்களை எனக்குப் பிடித்தது போலவே இருக்க வேண்டும் என்று நிர்பந்தம் செய்கிறோம் அப்படி இல்லையெனில் கோபம் கொள்கிறோம் அதை ஒரே கண்ணோட்டத்தில் எனக்கு பிடிக்காதது செய்ததால் கோபம் வந்துவிட்டது என்று கூறி சாதாரணமாக கடந்து செல்கிறோம் ஆனால், அது அவர்கள் மேல் கொடுக்கப்பட்ட வன்முறை மற்றும் உங்களுக்கு நீங்களே கொடுத்துக்கொண்ட தண்டனை என்பதை அறிந்து கொள்ளாமலேயே வாழ்கின்றோம்.

அதுமட்டுமல்ல பற்று வைத்த அனைத்தின்மீதும் இது இப்போது கிடைக்க வேண்டும் இது இப்படி இருக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பையும் சேர்த்து வைக்கிறோம் அது மேலும் மேலும் துன்பத்தை அதிகரிக்க காரணமாக அமைகிறது உதாரணமாக என் மனைவி இப்படித்தான் இருக்க வேண்டும் இப்படித்தான் பேச வேண்டும் என் குழந்தை இப்படித்தான் நடக்க வேண்டும் இதைத்தான் படிக்க வேண்டும் சென்று பல கட்டளைகளை எதிர்பார்ப்புகளை நம் பற்று வைத்துள்ள பொருளின் மீதும் மற்றும் உயிர்களின் மீதும் வைக்கிறோம் அப்படியில்லாமல் அது கொஞ்சம் மாறும்போது நாம் மன அழுத்தத்திற்கு ஆட்படுகிறோம் வாழ்க்கையில் மகிழ்ச்சி இல்லை என்று புலம்புகிறோம்.

இப்போது கூறுங்கள் நம் மகிழ்ச்சி எதனால் கெடுகிறது? ஆம் பற்று வைத்ததால் தான். எதன்மீதும் பற்று வைக்காமல் அதன் இயல்போடு அதை அப்படியே ஏற்றுக்கொண்டால் நிச்சயம் மகிழ்ச்சியாக வாழலாம். இதனால்தான் ஞானிகள் பற்றற்ற வாழ்வு வாழவேண்டும் என்றனர். பற்றற்ற நிலையையே #ஞானம் என்றனர்.